தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் லெஸ்டர் பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கையளிப்பு!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக இலங்கை தூதரகம் முன்பாக கொலைமிரட்டல் விடுத்த இலங்கை இராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லெஸ்டர் பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கையளிப்பு.
இலங்கையின் 70 வது சுதந்திர தின நாள் அன்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற, இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மற்றும் போர் குற்றத்திற்கு எதிராக இதை வெளி உலகத்திற்கு தெரிய படுத்ததும் முகமாகவும்,
நீதி கேட்டும் அமைதியான வழியில் போராடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள்மீது
கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக
பல போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதற்க்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக லெஸ்டர் கிழக்கு பகுதி பாராளுமன்ற உறுப்பினரான Keith Vaz அவர்களை மனோ( தமிழர் ஒருங்கிணைப்பு குழு லெஸ்டர் பொறுப்பாளர்) மற்றும் ரனித்தா தியாகேசு அவர்கள் சந்தித்து பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் கொலை மிரட்டலுக்கான அதாரங்களை சமர்ப்பித்ததுடன் இதற்கான நடவடிக்கையினை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அதேவேளை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் இதற்காக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல் பிரிவு தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Comments
Loading...