Designed by Iniyas LTD
தமிழர் தாயகத்தில் தமிழிற்கு வந்த நிலை…!! கண்டுகொள்ளாத தமிழ் அமைச்சர்கள்..
கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் தமிழ் எழுத்து பிழைகள் காணப்படுகின்றமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வுக்கான வரவேற்று பதாகையில் வரவேற்கிறோம் என்பதற்கு பதிலாக தமிழில் “வரவேட்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அமைக்கப்பட்டுவந்த குறித்த உள்ளக விளையாட்டரங்கத்தை விளையாட்டரங்கை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தா்ஷினி திறந்துவைத்துள்ளாா்.
நிகழ்வில் சிங்கள அமைச்சா்களான ஹாின் பொ்ணான்டோ மற்றும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ம ற்றும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோா் விருந்தினா்களாக கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் நிகழ்வில் தமிழ் அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, மற்றும் பிரதேசசபை தலைவா் உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டபோதும் இந்த எழுத்து பிழை தொடா்பாக அவா்கள் கண்டுகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க விடயம்..


