Designed by Iniyas LTD
தமிழர் தாயகத்தில் பௌத்த சின்னங்கள்! லண்டனில் ஆவணம் வெளியீடு
அதிகரித்து வரும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட, சிங்களமயமாக்கல் வரலாற்று முக்கியத்துவமிக்க தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தின் பின்பான சூழலில் ஏற்படுத்தப்படுகின்றது. இது பல தசாப்தங்களாக சிறி லங்கா அரசுகள் சிங்களமயமாக்கலை ஏற்படுத்தி வருவதின் தொடர்ச்ச்சியாகும்.
தமிழ் சமூகம் பாரிய யுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. அழிக்கப்பட்ட ஆலயங்கள், இறந்தவர்களுக்கான உணர்வுபூர்வமான அஞ்சலிகள் என்பவற்றிற்கு இன்னமும் இடம் இல்லை. சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாத போதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது. இது யுத்தத்தின் வடுக்களை ஆற்ற உதவாது.
சிங்களமயமாதல் தமிழரின் கலாச்சார நிகழ்ச்சிகளிலும், சமய, சமூக நிகழ்ச்சிகளிலும், பொருளாதார செயற்பாடுகளிலும், பொதுசேவை ஆட்சேர்ப்பிலும், கல்வித்திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களின் வரலாறு திரிக்கப்பட்டு சிங்கள, பௌத்த வரலாறாக மாற்றி எழுதப்படுகின்றது. அவை எதிர்கால சந்ததிகளுக்கு பாடப் புத்தகங்களில் புகுத்தப்பட்டும் வருகின்றது.
தமிழர்கள் வசிக்கும் பிரதேசங்களில், பௌத்த சமயம் பின்பற்றாதவர்கள் உள்ள இடங்களில் சிங்களத்தின் பௌத்த கோவில்களும், அதன் கட்டமைப்புகளும் இடம்பெறுவது தமிழர்கள் இருப்புக்கு மிகவும் ஆபத்தானது. தொன்மை வாய்ந்த கலை, பண்பாடு, சமயம் என்பன சிதைக்கப்பட்டு மறைக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகின்றது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் பல இடங்களில் சத்தமின்றி இரகசியமாக சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது. சிங்கள அரசின் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட கலாச்சார இன அழிப்பினை பிரித்தானிய தமிழர் பேரவை ஆவணப்படுத்தியுள்ளது. இம் முதலாம் பதிப்பில் கிடைக்கப் பெற்ற மிகக் குறைந்த வளங்களை பயன்படுத்தி மிகவும் சிரமத்தின் மத்தியில், இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தம் உரிமைகளை நிலை நாட்டுவதில் பெரும் தியாகம் செய்தவர்கள். ஆனாலும் எந்த இனத்தின் மீதும் எந்த மதத்தின் மீதும் மேலாதிக்கம் செலுத்தாது ஏனைய மக்களுடன் சமாதான சகவாழ்வு வாழ விரும்புபவர்கள். வடக்கு கிழக்கில் தாமாக வந்து குடியேறி தமது கலை, பண்பாடு, மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் எல்லோருடனும் சகோதர உறவுடன் வாழவே விரும்புகின்றனர். ஆனால் தம் தாயகத்தில் அரசியல், பொருளாதார ரீதியாக அல்லது சமூகரீதியாக சுற்றி வளைத்து தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் சிங்கள பௌத்த மேலாதிக்க மூலோபாயத்தின் அடிப்படையில் எடுக்கும் எந்த நடவடிக்கையிலும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
சிறி லங்கா அரசினால் காலம் காலமாக தமிழர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுதலும், அங்கு சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் அமைத்தல் போன்ற செயற்பாடுகளும் தொடர்ச்சியாக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் பிரித்தானிய தமிழர் பேரவை நில ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் என்னும் பெயரில் மிக இரகசியமாகவும் தீவிரமாகவும் நில அபகரிப்பினை மேற்கொண்டுவருகின்றது. கடந்த காலங்களில் அபகரிக்கப்படட தமிழர்களின் நிலங்கள் தொடர்பில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமையால் எதிர்காலத்தில் நிலங்களை மீள பெற்றுக்கொள்வதில் பாரிய சட்ட சிக்கல்களை தமிழர்கள் எதிர் கொண்டுள்ளனர்.
அதே சமயம் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் உள்ள தமிழர்களின் அடையாளங்களும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றது. இலங்கை அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பின் வெவேறு வடிவங்களை சர்வதேச நாடுகளுக்கு வெளிக் கொண்டுவரும் முகமாக தொடர்ச்சியாக வெளிவரவுள்ள ஆவணமாக்கள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆவண வெளியீட்டு நிகழ்வு ஒழுங்கு செய்துள்ளது.
கடந்த காலங்களில் இன அழிப்பு என்று வெறும் கோஷங்களை மட்டும் முன்வைக்கும் முயற்சி காணப்பட்டது. ஆவணப்படுத்தப்படாது விட்டால் இன அழிப்பு என்பதனை சர்வதேசம் உட்பட எவருமே அதனை பாரதூரமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.
பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த காலங்களில் நில அபகரிப்பு தொடர்பில் சர்வதேச நிபுணர்களை வரவழைத்து மாநாடு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரித்தானிய தமிழர் பேரவை இராணுவத்தினால் வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட நிலம் பற்றி வெளியிட்ட புள்ளி விபரங்களையே தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகம் என்பன சர்வதேச நாடுகளுக்கு கையளித்து வருகின்றனர். கடந்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமைக் கழக கூட்டத் தொடரில் பக்க நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்திருந்தமையும் அதில் சிங்கள பௌத்தமயமாக்கல் பற்றிய தரவுகள், ஆதாரங்கள் ராஜதந்திரிகளுக்கு காண்பிக்கப்பட்டு தொடரும் நில ஆக்கிரமிப்பு நிரூபிக்கப்பட்டது.
என்னும் ஆவணத் தொகுப்பு எதிர்வரும் திங்கள் கிழமை 24 அக்டோபர் 2016அன்று மாலை 6 மணியிலிருந்து 8:30 மணிவரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் என்னும் அரங்கத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு நகரங்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இவ் ஆவணம் வெளியிடப்படவுள்ளது. அனைத்து தமிழ் மக்களும் இவ் ஆவணத்தினை பெற்றுக் கொண்டு தாம் வாழும் நாடுகளின் அரசியல்வாதிகள், சமய சமூக தலைவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சர்வதேச ஊடகங்கள், முடிவெடுப்பவர்களிடம் கையளித்து இன அழிப்பு தொடராமல் தடுக்க சர்வதேச வலைப் பின்னலை ஏற்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.