தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது – சிறீதரன்..

தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பூநகரியின் நெற்பிலவுப்பகுதியின் நாரந்தாழ்வு வீதியின் புனரமைப்பில் இராணுவத்தலையீடு இருப்பது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து குறித்த பகுதி  மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை  வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்  தமிழர்கள் இந்த மண்ணிலே தங்ககளைத்தாங்களே ஆள வேண்டும் என்றும் அதற்காகத்தான் நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய தேசம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதை எமது மக்களும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுமே தீர்மானிக்க வேண்டும் இராணுவத்தினர் அல்ல. என்றும் அவர் இதன்போது  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...