தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் பிரச்சினையை ஆராய ஸ்ரீலங்கா வருகிறாராம் சுஷ்மா

01-1433143092-sushma7566-600

ஈழத் தமிழர்களின் பிரச்சினை மற்றும் இந்திய- ஸ்ரீலங்கா உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் விரைவில் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் மீள்குடியேற்ற பிரச்சினை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகைக்கு முன்னரான பயண முன் ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

Comments
Loading...