Designed by Iniyas LTD
தமிழர் பிரதேசத்தில் அவர்களது கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறாகாது!
ஒரு பல்கலைக்கழகம் தனது பிரதேசத்தை சேர்ந்த கலாசாரத்துக்கு முக்கியதுவம் கொடுப்பதை யாராலும் தவறென குறிப்பிடமுடியாது என களனி பல்கலைகழகத்தின் வரலாற்று பேராசிரியர் கல்கந்த தர்மானந்த சேரர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், களனிப் பல்கலைக்கழக்த்திலோ பேராதெனிய பல்கலைக்கழகத்திலோ பெரும்பாலான நிகழ்வுகள் அவர்களின் பிரதேசம் சார்ந்த முறைப்படியே நடைபெற்று வருவதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் தமது பிரதேச கலாசாரத்துக்கு முன்னுரிமை கொடுப்பதனை தவறென கூறமுடியாது.
தமிழர்கள் சிங்களவர்களை தாக்குகிறார்கள் என தென்னிலங்கையிலும், இராணுவத்தின் துணையுடன் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்குகிறார்களென வடக்கிலும் ஒரு பயப்பீதி உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலமை அவ்வாறல்ல, பல்கலைக்கழக தாக்குதல்கள் என்றுமே புதியதல்ல, சில பல்கலைக்கழகங்களில் மாணவ உயிரிழப்புக்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன ஆனால் இந்த பிரச்சினை மட்டும் என்றுமில்லாதவாறு மிகவும் பெரிதக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.