தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழினியின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தமிழினியின் இறுதிக் கிரியை இன்று பரந்தன் சிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்துறையின் பொறுப்பாளர்  தமிழினி  என்றழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் சிவகாமி நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து அரசியல் திறமையும் தேசியப் பற்றும் கொண்டு போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்தார்.

t3

இவரின் உடல் தற்போது ஓராங்கட்டை இந்து மயானத்திற்கு மக்கள் புடைசூழ  ஊர்வலமாகக் கொண்டு சென்று வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

t1

இவரின் இறுதி ஊர்வலத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்,   கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , கஜதீபன், சிவாஜிலிங்கம், சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இவருக்கு சமாதி கட்டுவதற்காகவே வித்துடல் தகனம் செய்யப்படாமல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...