Designed by Iniyas LTD
தமிழீழத்தை உருவாக்க தமிழக மக்களின் பங்கு அவசியம்!ருத்ரகுமாரன்
தமிழக அரசியல் கட்சிகள் தமிழீழத்தை உருவாக்க முனைப்பு காட்ட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படும் அமைப்பின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தமிழீழத்தை உருவாக்குவது குறித்த பிரச்சார முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகள் தமிழீழ மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் கரங்களை பலப்படுத்த முயற்சிக்க வேண்டுமெனவும் அதற்கு தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ மக்களின் சுதந்திரம் மிகவும் அவசியமானது என்பதனை தமிழக அரசியல்வாதிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் புதிய சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற போர்வையில் சிங்கள தேசம் ஐக்கிய இலங்கை என்ற தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதாகவும் அதன் ஊடாக தமிழீழ கோரிக்கை முடக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பலம்பொருந்திய நாடுகள் சில சுய லாப நோக்கில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள தேசத்துடன் நல்லுறவைப் பேணி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சில நாடுகள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டப்படவில்லை எனவும், இந்த அணுகுமுறையை இந்திய மத்திய அரசாங்கமும் பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
