Designed by Iniyas LTD
தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் இராண்டாம் ஆண்டு நினைவு தினம்…
கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட எஸ்.ஜே.சாந்தன் சிறுநீரக கோளாறுகாரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்ற வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 1972 ஆம் ஆண்டு கொழும்பு செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்ற போதே அவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
1981 ஆம் ஆண்டு கண்ணன் இசைக் குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்த சாந்தன், அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே (சாந்தன் இசைக்குழு) இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார். 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய சாந்தன் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்களையும் பாடி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர், வானொலி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். யுத்த காலங்களில் சாந்தன் இசைக்குழு பல்வேறு பகுதிகளிலும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததுடன், எங்கு பார்த்தாலும் சாந்தன் இசைக்குழுவிற்கே மிகுந்த வரவேற்பும் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

