Designed by Iniyas LTD
தமிழீழ பண்பாட்டு காலாச்சார விழுமியங்களுக்கமைய செயற்பட வேண்டுமென வடமராட்சியில் சுவரொட்டிகள்…
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது மௌனத்துக்குள் இயங்கு நிலையில் உள்ளதாகவும், தமிழீழ பண்பாட்டு காலாச்சார விழுமியங்களுக்கமைய செயற்பட வேண்டுமென்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்றையதினம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதே போன்று குறித்த சுவரொட்டிகள் வடமராட்சியின் வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் ஒட்டப்பட்டு இருந்தததாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளதோடு, விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
அதிலும் நேற்று முன்தினம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையில் நேற்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டம், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களினதும், பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு .
ஆயுத போராட்டமானது 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி மௌன நிலைக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை.
மௌனத்துக்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்’ எனவும் எமது சமூகத்தை திசை திருப்பும் இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வேண்டுமெனவும் சுவரொட்டியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
