Designed by Iniyas LTD
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பா!
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (26-07-2017) விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009 ல் அதன் இராணுவத் தோல்விக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்பதாலேயே இந்த தடை நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
எவ்வாறிருந்த போதினும், பாலஸ்தீனிய இஸ்லாமியவாத இயக்கமான ஹமாஸை ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2009 ம் ஆண்டு இராணுவத் தோல்விக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டது அபாயகரமானதாக இருப்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் “விடுதலைப் புலிகளின் நிதிகளின் தொடர்ச்சியான முடக்கம் ரத்து செய்யப்படுவதை நீதிபதி நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது” என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமானது தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த 2006ஆம் ஆண்டு ஆபத்தான பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்ததோடு ஐரோப்பிய நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்களையும் முடக்கியது.


