Designed by Iniyas LTD
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் – இல.கணேசன்
திருச்சி திருவெறும்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது– நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக. கட்சி 19.6 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
தற்போது கட்சியில் புதிய உறுப்பினர்கள் பெருமளவில் சேர்ந்துள்ளனர்.மேலும் இளைஞர்களின் ஆதரவு மோடிக்கு உண்டு. காரணம் மோடியின் செயல்பாடு, நம்பிக்கை, லஞ்சம் இல்லாத ஆட்சி, விரைந்து செயல்படும் திறன் ஆகியவையே ஆகும். தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த , படித்த இளைஞர்கள் வேலையை தேடி அலையாமல் வேலை வழங்கும் திட்டமாக முத்ரா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது அதுபோல் உருவானது தான் பெல் போன்ற நிறுவனங்கள்.
சட்டசபை தேர்தலில் அசாம், மேற்குவங்கம் ஆகியவற்றில் பதிவான 80 சதவீதம் வாக்குகளை போல் தமிழகத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவானால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.