தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்நாட்டில் தான் சுங்கச்சாவடிகள் அதிகம் – வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.vaiko

அண்டை மாநிலமான கேரளாவில் சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, குறைவான சுங்க வரியை கேரள அரசே வசூலிக்கிறது.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் சுங்கச்சாவடி விதிகள் 2008-ல் வகுக்கப்பட்டன. தற்போது பா.ஜ.க. அரசும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களையே செயல்படுத்தி வருகிறது.

வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போதே சாலை வரி வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகள் அமைத்து தனியார் கட்டாயமாக சுங்கவரி வசூல் செய்வது மக்கள் தலையில் இரட்டை வரி விதிப்பது போல் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுவதுடன், சுங்கச் சாவடிகளையும் படிப்படியாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Comments
Loading...