தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் பொலிசாரை நம்புவதில்லை! குரே பெருமிதம்

வடமாகாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாதுகாப்பது சிங்கள பொலிஸார் எனவும், இது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள பொலிஸ் அதிகாரிகளை நம்பும் அளவுக்கு தமிழ் பொலிஸ் அதிகாரிகளை நம்பாமை தொடர்பில் தேடி ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் எலுவைத்தீவு மற்றும் அனலைத்தீவுகளுக்கிடையில் பயணிகள் போக்குவரத்து படகு சேவையை இன்று (26) ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குரேயின் கூற்றுப்படி பார்த்தால் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு உயிர்ப்பயம் எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

Comments
Loading...