Designed by Iniyas LTD
தமிழ் கைதிகளின் விசாரணையை வடக்கு நீதிமன்றங்களுக்கு மாற்ற கோரிக்கை!
அநுராதபுரம் நீதிமன்றில் இடம்பெறும் வடக்கின் இளைஞர்கள் 12 பேரின் வழக்கு விசாரணைகளை வடக்கில் உள்ள நீதிமன்றங்களிற்கு மாற்றுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அமைச்சர் விஜயதாச ராஜபக்சாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 12 பேர் அநுராதபுரம் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இவர்களின் வழக்குகளிற்காக இக் கைதிகளின் உறவுகள் அநுராதபுரம் சென்று வருவது , சட்டத்தரணிகள் ஏற்பாடு , கைதிகளைப் பார்வையிடுதல் போன்றவற்றில் மொழிப் பிரச்சணையுடன் நிதி நெருக்கடியினையும் எதிர் கொள்கின்றனர்.
எனவே குறித்த கைதிகளின் வழக்குகளை வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றுவதன் மூலம் குறித்த 12 கைதிகளின் உறவுகளிற்கும் ஏற்படும் மேற்படி நடவடிக்கைகளை சீர் செய்ய முடியும் என்பதனால் குறித்த கைதிகளின் உறவுகளின் கோரிக்கையின் பிரகாரம் இவர்களின் வழக்கு நடவடிக்கைகளை வவுனியா நீதி மன்றிற்கு மாற்ற ஆவண செய்யவேண்டும் . என கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கைகளை ஆராய்ந்த அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் கவணம் செலித்துமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்து கடிதம் எழுதியுள்ளதோடு அதன் பிரதியினையும் எனக்கு அனுப்பி வைத்துள்ளார். எனத் தெரிவித்தார்.
இதன்பிரகாரம் குறித்த கைதிகளின் வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றிற்கு மாற்ற சட்டமா அதிபர் ஆவண செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார்.