Designed by Iniyas LTD
தமிழ் சினிமாவா? ஐயோ நான் வரவில்லை – நடிகை
இந்தியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகி இருக்கும் லிங்கமான நடிகை, தமிழ் மொழியில் நடிப்பது என்றாலே அலர்ஜியாக இருக்கிறதாம். எல்லாம் அவர் நடித்த படத்தில் நேர்ந்த கசப்பான அனுபவமாம். ஸ்டார் நடிகர் நடித்த படத்தில், நடிகை ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் பயன்படுத்தப்பட்டதால் அந்த படத்தில் நடித்ததை சரியாகக் கொண்டாடக் கூட முடியவில்லையாம்.
அடுத்ததாக தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க நடிகை முயற்சி செய்தாராம். ஆனால், அந்த படத்தில் 2 நடிகைகள் நடிக்க இருப்பதாக வந்த தகவலால், கண்டிப்பாக தம்மை டம்மியாக்கி விடுவார்கள் என்று நினைத்து ஓரங்கட்டி இருக்கிறாராம். இந்த படத்தில் நடிக்க அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவாய்ட் செய்துவிடலாம் என்று நினைத்து வருகிறாராம்.