தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் 50 கோடிவரை பேரம் பேசினார்கள்-சாந்தி எம்பி..

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல்  50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசியதாகவும்    வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் போரால் பாதிப்புக்களுக்குள்ளான பகுதியில் அல்லலுறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்,

கனடா செந்தில்குமரன் நிவாரண அமைப்பின் பத்து இலட்சத்து இருபத்தாறாயிரத்து ஐநூறு ரூபா செலவில் இரண்டரை ஏக்கர் காணியில் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்று அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட,

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களிடம் உங்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே சிறுபான்மை இனம் என்று தமிழர்களை ஓரங்கட்டிய சிங்கள அரசியல் வாதிகள் இன்று தமிழினத்திடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை வந்துள்ளது.

இவ்வாறு ஒரு நிலை ஏற்ப்படும் என்று மகிந்த ராஜபக்ச நினைத்திருப்பாரா? இது அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கின்றதை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவே  நாம் பாக்கிறோம்

இந்த மகிந்த ராஜபக்ச எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற வகையில் பேரம் பேசுகின்ற நிகழ்வில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதென்பது அது அவர் இவ்வாறானதொரு நிலை தனக்கு ஏற்ப்படும் என்று நினைத்திருக்கவேமாட்டார்.

  இவர் என்ன விலை கொடுக்க முடியும் எமது தமிழ் இனத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈர்த்த எங்கள் தியாகிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்இது ஒரு தாய் மனத்தினுடைய கண்ணீர் ஒரு தாயினுடைய மன உக்கிரம் தான் இன்று மகிந்தவை மண்டியிட வைத்திருக்கிறது

அதுமட்டுமல்ல தமிழினம் தங்களுக்கு தேவையில்லை அவர்கள் சிறுபான்மை இனம் என்று ஓரங்கட்டி வைத்திருந்த தேசிய கட்சிகள் அனைத்துமே இன்று தமிழர்களையே நம்பியிருக்கிறது .

இந்த தமிழர்கள் ஆணையிட்டு அனுப்பிவைத்திருக்கின்ற கூட்டமைப்பை நம்பியே அவர்கள் இன்று ஆட்சிப்பீடம் ஏறவேண்டிய நிலை வந்துள்ளது தமிழினம் அவர்களுக்கு அடிமையாகாது என்றும்,

இந்த மக்களுடைய நின்மதியான விடிவுக்காக நின்மதியான வாழ்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்களோடு இணைந்து மக்களை ஏமாற்றாத வகையில் பயணிக்கும் என நான் ஆணித்தரமாக கூறுகின்றேன்

ஏனைய உறுப்பினர்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் 6 கோடி முதல்  50 கோடிவரை பேரம் பேசப்பட்டதாகவும்  அவர் மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...