தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் பெண்கள் மீது சிங்கள அதிகாரிகள் பாலியல் தொல்லை!

paliyal-imsai (1)கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா  அரச நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற இளம் தமிழ் பெண்கள் மீது சிங்கள அதிகாரிகள் பாலியல் ரீதியான இம்சைகளை புரிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கில் மகளிர் உரிமை அமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மாவட்டத்தில் அதிக அளவில் சிங்களவர்களே அரச நிறுவனத்தின் பிரதானிகளாகவும், சிரேஷ்ட்ட அதிகாரிகளாகவும் இருக்கின்றனர். அவர்கள் தமிழ் பெண்களை பாலியல் ரீதியாக இம்சிக்க முயற்சிகளை எடுத்துவருகின்றனர். இதன் காரணமாக பல பெண்கள் தங்களின் தொழில்களை விட்டு விலகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Comments
Loading...