தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உரிமைகளை வென்றெடுக்க மாவீரர் நாளில் ஒன்று கூடுங்கள் – சிவப்பிரசாகம் சிவமோகன்

தமிழின விடுதலைக்காக வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூறும் மாவீரர் வாரத்தின் ஆரம்பநாள் 21 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த நாளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் இந்த நாளில் ஒன்று சேர வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவப்பிரசாகம் சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.maveerar-day

எமது உறவுகளை நினைவேந்துவது எமது உரிமை என தெரிவித்த அவர், அவ்வாறு அந்த உரிமையை மறுப்பது பேரினவாத ஆட்சி தொடர்கின்றது என்பதையே வெளிப்படுத்தி நிற்பதாகவும் குறிப்பிடடுள்ளார். மாறி மாறி ஆட்சிக்குவரும் இராணுவமயப்படுத்தபட்ட இனவாத பேரினவாத அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இம்முறை வீரமறவர்களை நினைவேந்துவது என்பதை அரசாங்கம் தடுக்க முற்படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments
Loading...