தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் அரசியல் யாப்பு என்றுமே வெளிவருவதில்லை!

1433581877-6922தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் அரசியல் யாப்பு வெளிவருவதில்லை என வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சுட்டிக் காட்டினார்.
வடமாகாண சபையின் 70 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.
இதேவேளை பிரேரணை குறித்து கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஊடாக ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.
ஆனால், ஆளுநர்களே இருக்கக் கூடாது என தெரிவிக்கின்றோம்.
அந்தவகையில், மத்திய மாகாண ஆளுநருக்கும் எனக்கும் இடையில் வானொலி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் முகமாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலின் போது, மத்திய மாகாண ஆளுநரின் கருத்துக்களை பார்க்கும் போது, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் யாப்பு எந்தக்காலத்திலும் வெளிவரப்போவதில்லை என தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்களின் சம்மதம் அந்த அரசியல் யாப்பிற்குள் இருக்காது என சிவாஜிலிங்கம் சுட்டிக் காட்டினார்.

Comments
Loading...