Designed by Iniyas LTD
தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழரசுக்கட்சி அவசர ஒன்றுகூடல்!
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பேரவை உறுப்பினர்கள் இரவில் சந்தித்தனர்.
24ம் திகதி பேரவையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்படும் எழுச்சிப்பேரணியில் பங்கு கொள்வது தொடர்பான சந்திப்பே இவ்வாறு இடம்பெற்றது. யாழ் வணிகர் கழக ஏற்பாட்டில் இடம் பெற்றமையினால் அதன் தலைவர் ஜெயசேகரத்தின் இல்லத்தில் ஞாயிறு இரவு இடம்பெற்றது.
இவ்வாறு இடம்பெற்ற சந்திப்பில் பேரவையின் எழுச்சிப் பேரணியில் தமிழ் தரப்பின் அணைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் , தற்போது தமிழர் பிரதேசங்களில் உள்ள நில விடுவிப்பு , கைதிகள் விடயம் , காணாமல்போனோர் பிரச்சணை , பௌத்த மயமாக்கள் என்பனவற்றனை சுட்டிக் காட்டுவதே இதன் நோக்கம்.
இதனை அமைதி வழியில் எடுத்துக்காட்டி அழுத்தம் கொடுப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டமையினால் இதற்கு ஆதரவினைக் கோருவதாக கோரப்பட்டது.
இதன்போது பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ஓர் அரசியல் யாப்பு இந்த ஆண்டு இடம்பெறும் . என சம்பந்தன் ஐயா கோரிய போது அதனை நையாண்டி செய்த தரப்புக்களுடன் இணைந்து செயல்படும் ஓர் அமைப்பு மேற்கொள்ளும் ஓர் பேரணி என்பது ஒரு புறமிருக்க.
இதே அமைப்பு தற்போது அரசியல் யாப்பு மாற்றம் நிகழத்தான் போகின்றது என்பதை அறிந்து உடன் ஓர் யாப்பு மாதிரியினை தயாரித்து வழங்குவதன் மூலம் சம்பந்தனின் கூற்று சரியானதே என்பதை ஏற்று விட்டீர்கள்.
இது ஒரு விடயமல்ல எதை மேற்கொள்ளும்போதும் இது நடக்காது அல்லது இதில் பிரயோசணம் இல்லை என எதிர்த்துவிட்டு பின்பு அதையே கோருவதன் மூலம் முன்பு நாம் எடுத்த நிலைப்பாடு சரியென நீங்கள் ஆமோதிப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது.
இவை அனைத்திற்கும் அப்பால் தற்போது அரசியல் யாப்பு இறுதிக் கட்டத்தினைத் தொட்டு நவம்பரில் தாக்கல் செய்வதற்கான கட்டத்தில் நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
அதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடும் தரப்பான நாமும் இதில் பங்கெடுப்பதென்பது இரட்டை நிலைப்பாடாக சர்வதேசம் நோக்கலாம் .
எனவே அதன் முடிவு தெரியாமல் இவ்வாறான செயல்களில் பங்கு கொள்ள முடியாது. இருப்பினும் பேரவையின் முதலாவது நிலைப்பாட்டில் நாமும் இனங்குகின்றோம் அவைதொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் தற்போதும் மிக இருக்கமான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
இதனால் சில முன்னேற்றமும் கண்டுள்ளோம். ஆனாலும் பேரணி நடாத்துவதான உங்கள் முடிவிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. அது உரிமை தடைபோடவும் முடியாது எனப்பதிலளித்தனர்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் , சி.சிறிதரன் ஆகியோரும் பேரவை சார்பில் வைத்தியக் கலாநிதிகளான லக்ஸ்மன் , சிவன்சுதன் , பாலமுரளி , பங்குத்தந்தை ரவிச்சந்திரன் உட்பட ஏழுபேர் பங்கெடுத்திருந்தனர்.
இதன்போது எதிர்கால அரசியல் யாப்பு முன்னேற்றம் தொடர்பில் சந்தித்து உரையாடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.