தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ், முஸ்லீம் தமிழ் மக்களுக்கு ததேகூட்டமைப்பினராகிய நாங்கள் தலைவணங்குகின்றோம் – மாவை

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்திய தமிழ்ச் சமூகத்தின் இனப்பிரச்சினை உட்பட உடனடிப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு இந்த புதிய அரசாங்கத்திடம் உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவும் த.தே.கூட்டமைப்பு தயாராக உள்ளது என பா.உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை ஏற்று பொது எதிரணிக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை ஏற்று திடசங்கர்ப்பம் பூண்டு வாக்களித்த தமிழ், முஸ்லீம் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் தலைவணங்குகின்றோம்.

நாங்கள தேர்தல் காலங்களில் பிரதான வேட்பாளர்களுடன் எழுத்து மூலமாகவோ அல்லது பகிரங்கமாகவோ எந்தவிதமான உடன்படிக்கையயினை கைச்சாத்திட முடியாத நிலை காணப்பட்டிருந்தது.

குறிப்பாக மகிந்த ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச முடியாது என்றுதான் சொல்லியிருந்தார். மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தல் தொடர்பாக பேசிய போதும் எந்த உடன்படிக்கையும் செய்திருக்கவில்லை என்பது மிகவும் உண்மையான விடயம்.

ஆனால் வேட்பாளராக இருந்த ராஜபக்ச மற்றும் அவருடைய அமைச்சரவையினர், பேச்சாளர்கள் மிக மோசமாக உண்மைக்கு மாறான பொய்களை சொல்லி சிங்கள மக்களை தூண்டிவிட்டு, அதனடிப்படையில் அவர்கள் வெற்றி பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இதனால்தான் பொது எதிரணியினருடன் நாங்கள் திட்டவட்டமான பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. புரிந்துணர்வுடன் நாங்கள் செயற்பட்டிருந்தோம். ஆனாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் தீர்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

உடனடிப் பிரச்சினைகளாக தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் குறிப்பாக எந்த இடத்தில இருந்து அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களோ, அதே இடத்தில் அவர்களுடைய வீடுகளில் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும். அவர்களுடைய காணிகள் அபகரிககப்படுதல் போன்றவற்றினை உள்ளடக்கி அறிக்கை ஒன்றினையும் பொது எதிரணியினர் வெளியிட் டிருந்தார்கள்.

ராஜபக்ச அரசாங்கம் போருக்கு பின்னரான ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களுடைய இன அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வந்திருந்தார். சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினைக் கூட நாங்கள் கேட்க முடியாதவர்களாக தமிழ் சமூகத்தினை மாற்றியிருந்தார்.

தமிழ் பிரதேசத்தின் அடிப்படையினையே தமிழ் பிரதேசதத்தினை தனித்துவம் அற்ற சமூகமாக மாற்றியிருந்தார். இராணுவத்தினை குவித்து தமக்கு தேவையானவற்றினை அரசாங்கம் சாதித்து வந்தது.

போராடுவதற்கு எவ்வளவோ நெருக்கடிகள் இருந்தன. எமது போராட்டத்திறத்கு இராணுவம் பெரும் தடையாக இருந்தது.

இந்த நிலையில் எமது தமிழ் மக்களுடைய கண்ணீரை துடைப்பதற்கு ஒரு அவகாசம் தேவைப்பட்டது. அதனை முதலில் நிலைநிறுத்தி புதிதாக வருகினற அரசாங்கத்துடன் புதிய சூழலில் எமது தமிழ் மக்களுடையய உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அடுத்ததாக அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு சூழலையும் அதற்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் நாடத்துவதற்கு உரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துள்ளோம்.mavai-senathiraja

மற்றும் ராஜபக்ச சிங்கள தேர்தல் தொகுதிகளில் கூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி வாய்ப்பினை அதிகப்படுத்தியதும், உறுதிப்படுத்தியதும் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் முஸ்லீம், மலையக மக்கள் மற்றும் ஏனைய தொகுதிகளில் பரந்து அதிகமாக வாழும் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளே.

பொது எதிரணியின் வெற்றியால் புதிய சூழல் இங்கு உருவாகியிருக்கின்றது. தமிழ், முஸ்லீம் மற்றும் மலைய மக்களுய ஆதரவில் வெற்றி பெற்றதன் காரணமாக எங்களுடைய எதிர்கால இனப்பிரச்சினை உட்பட உடனடியாக பிரச்சினைகளின் மீது அக்கறை கொண்டு செயற்படுவார் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாக உள்ளது.

குhணமல் போனவர்கள், அரசியல் கைதிகள், பெண்களுடைய பாதுகாப்பு போன்றன தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் பலமும், நியாயமும் இந்த தேர்தல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினை தீர்வுக்கும் சிங்கள தீவிரவாதத்திற்குதிராக மக்கள் இவ்வளவு பலமாக வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வலிமைப்படுத்தியுள்ளனர்.

Comments
Loading...