Designed by Iniyas LTD
தம்பி இராணுவத்தில் சரணடைந்ததாக இதயவீணையில் கூறப்பட்டது
எனது தம்பி இராணுவத்தில் சரணடைந்ததாக இதயவீணையில் கூறப்பட்டது. குறித்த விடயம் சரி என்பதையும் உறுதிப்படுத்தினோம் ஆனால் இதுவரை எதுவிதமான தகவலும் தெரியாது என தயாளனின் சகோதரி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.எனது தம்பி விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தார்.
2008.10.29 ஆம் திகதி விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் மன்னாரில் சண்டைநடைபெற்றது.அதற்கு எனது தம்பியும் சென்றிருந்தார். அப்போது தம்பியும் அவருடன் சென்றவர்களும்வரவில்லை. இதனால்4 நாள் கழித்து விடுதலைப்புலிகள் வீட்டிற்கு வந்து அறிவித்து விட்டு சென்று விட்டனர்.
பின்னர் இதயவீணை செய்தியில் மன்னாரில் இடம்பெற்ற மோதலில் புலிகள் சரணடைந்துள்ளனர்எனஅறிவிக்கப்பட்டது. அதனையடுத்து இதயவீணையுடன் பேசினோம். அவர்கள் தகவல் உண்மை என்றும் குறித்த தகவலை இராணுவத்தினரே வழங்கியதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் பூஸாவில் கண்டதாக கண்டவர்கள் கூறினார்கள். அதற்குப் பின்னர் எல்லா இடமும் தேடிவிட்டோம் எங்கும் எனது தம்பி இல்லை. சரணடைந்ததாக கூறப்பட்ட எனது தம்பிக்கு என்ன நடந்தது எனது தம்பியை மீட்டுத்தாருங்கள் என்று அவர் உருக்கமாக சாட்சியமளித்தார்.