தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தற்பாதுகாப்புக்காகவே பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்

தூத்துக்குடியில் இடம்பெற்ற கலவரத்தில் தற்பாதுகாப்புக்காகவே பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்  அ.தி.மு.க தலைமை செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை கூறியுள்ளார் .

இந்த சந்திப்பின்போது 13 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு கூறும் பதில் என்ன என செய்தியார்கள் கேள்வி எழுப்பியபோதே  அவர்  இதனை கூறியுள்ளார்.

அதேவேளை பொலிஸாரின்  உயிருக்கும் பொது மக்களின் உயிருக்கும் பெறுமதி வித்தியாசம் காணப்படுகின்றதா..? என ஊடகவியலாளர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதைலளிக்க நிலைதடுமாறிய தமிழக முதல்வர் வன் முறையை தூண்டும் விதத்தில் வினா எழுப்ப வேண்டாம் என தெரிவித்து பதிலளிக்காமல் புறக்கணித்ததாகவும்  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...