Designed by Iniyas LTD
தற்போதைய அரசானது எவருக்கும் மண்டியிடாது – நளிந்த பண்டார
தற்போதைய அரசானது எவருக்கும் மண்டியிடாது மாறாக மன்னிப்பு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த பண்டார தெரிவித்துள்ளார். சாதாரண கோரிக்கைகளை முன்வைப்பவர்களிடம் அதை செவிமடுப்பதற்கு அரசு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சிறிகொத்தாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசை அடக்குவதற்கோ அல்லது பயமுறுத்தியோ கோரிக்கைகளை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கு அரசு அடிபணியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கும் அரசு தயாராகவே உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.