தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலைமன்னாரில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்

தலைமன்னார் கடற்கரையில் இருந்து கடந்த வியாழக்கிழமை  இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதிகாலையில் நண்டு வலை பயன்படுத்தி ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு பேரையுமே காணவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மீனவர்கள் இருவரும்  கரை திரும்பாததால் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

வழக்க பதிவு செய்த மீன் வளத்துறை அதிகாரிகள்  கடற்படை ரோந்து கப்பல் மூலம் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில்  மீனவர்களை  தீவிரமாக  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...