Designed by Iniyas LTD
தலையின் ஒரு படத்திற்கு இத்தனை இயக்குனர்களா ? – வியந்துபோன கோலிவுட் !
தல அஜித் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சாத்தியஜோதி பிலிம்ஸ் தயரிப்பில் உருவான விவேகம் படத்தில் நடித்திருந்தார்.
Are these directors for a film of the head? – Wonderful Kollywood!
படமும் ரசிகர்களிடையும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, பாக்ஸ் ஆபீசை திணற விட்டது எல்லாம் அறிந்த தகவல்களே.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது அஜித்தின் அடுத்த பட அறிவிப்பை தான், இது பற்றியும் அஜித்தின் அடுத்த இயக்குனர் சிவா, ஷங்கர், விஷ்ணு வரதன் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புது தகவல் என்னவென்றால் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க 50 இயக்குனர்கள் அப்பான்மென்ட்காக காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அதில் புதுமுக இயக்குனர்கள், வளரும் இயக்குனர்கள் மட்டுமில்லாமல் கவுதம் மேனன், மோகன்ராஜா, விக்னேஷ் சிவன், அமீர், ராம், பாக்யராஜ் கண்ணன், பாண்டிராஜ் போன்றவர்களும் இருக்கிறார்கள்.
இந்த தகவலால் கோலிவுட் வட்டாரமே ஒரு நடிகருக்காக இத்தனை இயக்குனர்கள் வைட்டிங்கா என வியப்பில் ஆழ்ந்துள்ளது.