Designed by Iniyas LTD
தளர்த்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாடுகள்…
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விமானப்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
விமான நிலையத்துக்குள் செல்லும் போதும் அங்கிருத்து வெளியேறும்போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன் தினம் இரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் இனி வழமை போல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்லமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.