தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாதியின் கைதை கண்டித்து மருத்துவ ஊழியர்கள் போராட்டம்!

1யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற தாதி ஒரு­வரை யாழ்.பொலிஸார் விசா­ர­ணைக்கு என அழைத்துச் சென்று கைதுசெய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து வைத்­தி­ய­சாலையில் பணி யாற்றும் அனைத்து ஊழி­யர்­க­ளும் நேற்று பணிப்­பு­றக்­க­ணிப்பில் ஈடு­பட்­டனர்.

அரச தாதியர் உத்­தி­யோ­கத்­தர்கள் சங்­கத்­தி­னரும் அனைத்து ஊழியர் சங்­கத்­தி­னரும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இப் போராட்­ட­மா­னது நேற்று நண்­பகல் இரண்டு மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­கியதுடன் போராட்டம் மாலை வரை தொடர்ந்து இடம்­பெற்­றது.

போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் “வைத்­தி­ய­சாலை ஊழி­யர்­களின் பாது­காப்பை உறுதி செய், குற்­ற­வா­ளியை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தும் வரை போராட்டம் தொடரும், தாதி­யத்தை கொலை செய்­யாதே அது உயிரை காக்கும் தொழி­லாகும்’ போன்ற வாச­கங்கள் பொறிக்­கப்­பட்ட பதா­தை­களை தாங்­கி­ய­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இதே­வேளை இப் போராட்டம் தொடர்­பாக அரச தாதியர் உத்­தி­யோ­கத்தர் சங்க தலைவர் நற்­கு­ன­ராஜா தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது..

கடந்த இரு நாட்­க­ளுக்கு முன்னர் பார்­வை­யாளர் நேரம் முடிந்­ததன் பின்னர் உற­வினர் ஒருவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனது உற­வி­னரைப் பார்க்க சென்­றுள்ளார்.

இதன் போது அங்கு கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த ஆண் தாதியர் ஒருவர் குறித்த உற­வி­ன­ரிடம் உங்­க­ளது நேரம் முடிந்து விட்­டது ஆகவே நீங்கள் சென்­று­விட்டு மாலை வந்து பார்க்­கு­மாறு கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது பேச்சை குறித்த நபர் கவ­னத்தில் எடுக்­கா­தை­ய­டுத்து இரு­வ­ருக்­கு­மி­டையில் வாய்த் தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.

இச் சம்­ப­வத்­தை­ய­டுத்து குறித்த நோயா­ளரை பார்­வை­யிட வந்த நபரால் யாழ்.பொலிஸ் நிலை­யத்தில் தாதியர் தன்னை மிரட்­டி­ய­தா­கவும் துர் வார்த்­தை­களால் பேசி­ய­தா­கவும் தன்னை தாக்­கி­ய­தா­கவும் முறைப்­பாடு பதிவு செய்­யப்பட்டுள்ளது.

இத­னை­ய­டுத்து குறித்த தாதி­யரை பொலிஸார் விசா­ரணை செய்து வந்த நிலையில் நேற்­றைய தினம் விசா­ர­ணைக்கு என வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­திடம் கூறி அழைத்து சென்று அதன் பின்னர் கைது செய்து நீதி­மன்­றத்தில் முற்­ப­டுத்­தியுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த தாதி­யரை பிணை­யி­லேயே விடு­வித்துள்ளனர்.

அத்­துடன் குறித்த செய­லா­னது தவ­றா­ன­தா­னது. உண்­மை­யான குற்­ற­வா­ளியை விடுத்து தவறு செய்­யா­த­வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்­துடன் குறித்த தாதி­ய­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­தவர் கைது செய்­யப்­பட வேண்டும். அவர் தம்­மிடம் பகி­ரங்க மன்­னிப்பு கேட்க வேண்டும். உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். அது­வரை எமது பணி­பு­றக்­க­ணிப்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.

Close

Comments
Loading...