தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு?

an-32-flight-960x450-450x211சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட ஏ.என்.32 விமானம் கடந்த மாதம் 22ம் தேதி நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது மாயமானது.

23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, வெளிப்புற சக்தி தாக்குதல் காரணமாக இந்த விமானம் நடுக்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதனை தேடும் பணியில் சமுத்ரா ரத்னாகர் என்ற ஆய்வு கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த கப்பல் தொடர்ந்து கடலுக்கு அடியில் தனது தேடுதல் பணியை செய்துவருகிறது. இதில் பல மர்மப் பொருட்கள் தேடுதல் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, கடலுக்கு அடியில் மின்காந்த அலைகள் மூலம் 25 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்களில் மாயமான ஏ.என்.32 விமானத்தின் இறக்கையை சந்தேகத்தின் அடிப்படையில் கண்டிபிடித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் 2 நாட்களில் ஆய்வு முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...