Designed by Iniyas LTD
தாயகம் திரும்பிய ஈழ அகதிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
தமிழகத்தில் இருந்து 2011ம் ஆண்டிற்குப் பிற்பாடு தாயகம் திரும்பிய 2ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதார நிலவரம் தொடர்பில் வடமாகாண ஸ்ரீ ஆளுநர் 5 மாவட்ட அரச அதிபர்களுடன் ஓர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வட மாகாணத்தில் இருந்து யுத்தம் காரணமாக தமிழகம் சென்று வாழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் இருந்து திரும்பிய குடும்பங்களின் நலத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பிலேயே வட மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்பிரகாரம்கடந்த 2011 முதல் 2016 வரைக்கும் சுமார் 2ஆயிரம் குடும்பங்கள் வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள் ள போதிலும் 1854 குடும்பங்களின் பதிவே மாவட்டச் செயலகங்களின் ஊடாக பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தாயகம் திரும்பிய குடும்பங்கள் இரு அடிப்படையில் திரும்புகின்றனர் எனவும் அதில் யு.என்.எச்.சீ.ஆரின் ஊடாகவும் தாமே சுயமாகவும் திரும்புவதாக கூறப்பட்டது.
இவ்வாறு யு.என்.எச்.சீ.ஆரின் ஊடாக இதுவரையில் 1295 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 494 அங்கத்தவர்களும் நேரில் வந்தவர்களில் பதிவினை மேற்கொண்டவர்கள் 559 குடும்பங்களகச் சேர்ந்த 1070 பேருமாக மொத்தம் 1854 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 564 பேர் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களிற்கான வாழ்விட அமைப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட அரச அதிபர்கள் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதோடு அவ்வாறு திரும்பும் குடும்பங்களில் காணி அற்றவர்களிற்கு காணி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஆளுநரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட யு.என்எச்.சீ.ஆரின் பிரதி நிதி தனது கருத்தில் இந்தியாவில் இருந்த எம்மூடாக தாயகம் திரும்பும் குடும்பங்களிற்கு அனைவரிற்கும் இலவச விமானச் சீட்டை , விமான நிலையத்தில் இருந்து வீடு செல்ல ஒருவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா பணம் , அதன் பின்பும் அங்கத்தவர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதமான பணம் ஆகியவற்றுடன் உணவு அல்லாத பொருளிற்காக ஒருவர் கொண்ட குடும்பமாகின் 5 ஆயிரமும் அதற்கு மேற்படின் 10 ஆயிரமும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.