Designed by Iniyas LTD
தாயின் அரவணைப்பில் வாழும் மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை….
2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாணவி துஷ்சாதனா மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார்.
முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை குறித்த மாணவி கல்விகற்று வருகின்றார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலையில் தந்தையைப் பிரிந்து தாயின் அரவணைப்பில் குறித்த மாணவி வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் மாணவியை பாடசாலை அதிபருடைய ஊக்கமும் தரம் 5 வகுப்பாசிரியரின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
