தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாயை இழந்தபோதும் சாதித்துக்காட்டிய மாணவன்

முல்லைதீவு  முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்ற இராசேந்திரம் பிரதீபன்  க. பொ.த சாதராணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை ( 9ஏ )பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

கு|றித்த மாணவனின்  தாயும்  மூன்று சகோதரர்களும் நாட்டில் இடம்பெற்ற  இறுதி யுத்தத்தின் போது(2009) எறிகணைத் தாக்குதலினால் பலியாகியுள்ளனர்

இந்நிலையில் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளதாக குறித்த மாணவன் கூறியுள்ளார்.

அதோடு  கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக வருவதே தன்  எதிர்கால இலட்சியம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...