Designed by Iniyas LTD
தாய்லாந்தில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 21 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
தாய்லாந்து நாட்டில் கர்ப்பிணி பெண்கள் உட்பட மேலும் 21 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தற்போது கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 21 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, தாய்லாந்து நாட்டின் 76 மாகாணங்களில் 16 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்துள்ளது. ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.