Designed by Iniyas LTD
தாய்லாந்தில் பிறந்துள்ள இரட்டைத்தலை கொண்ட நிறமியற்ற ஆமை…

தாய்லாந்தில் இரட்டைத்தலை கொண்ட நிறமியற்ற ஆமை
பிறந்துள்ளது .
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி (Noon Ausanee) என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட வந்த ஆமை ஒன்று கடந்த மார்ச் மாதம் குட்டிகள் ஈன்றது.
அதில் ஒரு குட்டி அல்பினோ எனப்படும் நிறமி அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் பிறந்துள்ளது.
இந்நிலையில் அவ்ஸானியிடம் இருக்கும் ஆமையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஏராளமானோர் அதனைப் பார்வையிட்டுச் செல்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆமையை வாங்குவதற்கு போட்டா போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அஸ்வானி அந்த ஆமையை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 22 லட்சம் ரூபாய்க்கு விற்க சம்மதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.