தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாய்லாந்து ராணி மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் மக்கள்

201611182005339917_thailands-queen-in-hospital-with-high-fever-lung-infection_secvpfதாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88). கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்து வந்த அவர், கடந்த அக்டோபர் 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உலகின் நீண்ட கால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பூமிபாலின் மனைவியும், ராணியுமான ஸ்ரீகிட் நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. மன்னர் இறந்த நிலையில் ராணியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராணி ஸ்ரீகிட் பூரண குணமடைய வேண்டுமென தாய்லாந்து மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Comments
Loading...