தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாய்லாந்து வங்கியில் இரசாயண விபத்தில் 8 பேர் பலி!

showImageInStoryதாய்­லாந்தில் பாங்­கொக்­கி­லுள்ள வங்­கி­யொன்றின் அடித்­த­ளத் தில் ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு இடம்­பெற்ற இரசாயண விபத் தில் சிக்கி 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 7 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

மேற்­படி சியாம் கொமர்ஷல் வங்­கியின் தீ பாது­காப்பு முறை­மையை மேம்­ப­டுத்­து­வதில் ஈடு­பட்­டி­ருந்த ஒப்­பந்­தக்­கா­ரர்கள், தவ­று­த­லாக தீ அணைப்பின் போது எரி­த­லுக்கு அவ­சி­ய­மான ஒட்­சிசன் வாயுவை அகற்றப் பயன்­படும் வாயுக் கல­வையை வெளியிடச் செய்­ததால் இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி இர­சா­யன வாயுக் கல­வையின் வெளி­யீட்டால் மூச்சுத் திண­ற­லுக்கு உள்­ளாகி அவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­நி­லையில் இந்த அனர்த்­தத்­துக்கு ஒப்­பந்­தக்­கா­ரர்­களின் கவ­ன­யீ­னமே காரணம் என குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அந்த வங்­கியின் ஆவ­ணங்­களை களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட வங்கி கூறுகிறது.

Close

Comments
Loading...