தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திடீர் விஜயமாக முள்ளிவாய்க்கால் செல்லும் தமிழிசை!

இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணமாக நாளை முள்ளிவாய்க்கால் செல்லவுள்ளார்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் நாளைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது விஜயம் தனிப்பட்டது எனவும் அவர், கூறியுள்ளார்.

Comments
Loading...