Designed by Iniyas LTD
திபெத் எல்லைப் பகுதியில் லேசான நிலநடுக்கம்
நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 4.7 ஆக இது பதிவாகி உள்ளது. 
தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் மாலை 6 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஓக்கல்துங்கா மாவட்டத்தில் மையமாக கொண்டு 4.1 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுத்தை அடுத்து, இதுவரை சுமார் 442 முறை ரிக்டர் அலகில் 4-க்கும் அதிகமாக உணரப்பட்டுள்ளது.