தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுக – அதிமுக மாநிலங்களவையில் வாக்குவாதம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக அதிமுக எம்பிக்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  tmk

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். பலமுறை நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.  மீனவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதை சுட்டி காட்டிய சிவா, தமிழக அரசு தொடர்ந்து கடிதங்கள் மட்டுமே எழுதி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது ஆவேசமடைந்த திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர்களை பார்த்து, “ஏ… வாய மூடுயா” என்று தமிழில் திட்டினார்.  இதனையடுத்துப் பேசிய அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன், தமிழக மீனவர்கள் நலனுக்காக அதிமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டதுடன், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், தமிழக அரசின் முயற்சியால் விடுக்கப்பட்டது பற்றியும் பேசினார்.

மேலும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையினரை, இந்திய கடற்படையைக் கொண்டு விரட்டியடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் கோரிக்கை விடுத்தார்.

Comments
Loading...