தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று ஒரே நாளில் பிரச்சாரம் செய்கிறார்.  முதலில் மாலை 4 மணிக்கு மதுரையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி வாக்கு சேகரிக்கிறார்.rakul

பின்னர் மாலை 6 மணி அளவில் கோவையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை செய்கிறார். இதனையடுத்து, இரவு 7 மணி அளவில் சென்னை மதுரவாயலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தி வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து வரும் 10-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Comments
Loading...