தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலையில் 24 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை  கோணேச கோவில் கடற்பரப்பில்  மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிரதேசத்தில் இன்று காலை  அவர்கள்  மீன்பிடியில் ஈடுபட்டபோதே   கைதுசெய்யப்பட்டதாகவும்  கூறப்பட்டுள்ளது

குறித்த மீன்வர்களிடம் இருந்து நான்கு வலைகளும், நான்கு படகுகளும் 2 ஆயிரம் கிலோவுக்கம் அதிகமான மீன்களும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மீன்கள்  கடல் தொழில் நீரியல் வளத்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும்  கைது செய்யப்பட்ட மீனவர்கள்  கிண்ணியா,சல்லி,சாம்பல்தீவு மற்றும் ஜமாலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...