தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலை சீனன்குடா முகாமிலிருந்து தப்பியோடிய சிப்பாய்

திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த தமிழ் சிப்பாய் ஒருவர் இராணுவமுகாமிலிருந்து இன்று காலை தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, பெரியமடு முருகன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட,குறித்த  சிப்பாய் இன்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன்  தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இது தொடர்பாக விமானப்படையினர் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கு அமைய மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் வழிகாட்டலின் கீழ் சீனன்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், குறித்த சிப்பாயை தேடும்பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தேடுதலின் போது  சிப்பாய்க்கு வழங்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல் வைக்கும் சீருடையின் பகுதி கப்பற்துறை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...