தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலை மாணவர் படுகொலை சந்தேகநபர் மூவருக்குபிடி ஆணை.

trinco_murder

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பன்னிரண்டு சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு எதிராக தற்போது நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

திருகோணமலை பிரதான நீதவான் ஈ. சரவணராஜா முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முதலாம், ஏழாம் மற்றும் 13வது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், அவர்களுக்கு பிடிவிராந்தை பிறப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.

சந்தேக நபர்கள் பயணம் செய்த வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது போனதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை நகரில் காந்தி சிலைக்கு அருகாமையில், பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி கிடைத்திருந்த மாணவர்கள் உட்பட ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை வரையில் பேசப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா குற்றப்புலனாய்வு துறையினரால் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது 12 சந்தேக நபர்களில் 9 பேர் மட்டுமே ஆஜரான நிலையில், ஆஜராக தவறிய மூவரையும் கைதுசெய்வதற்கான பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ந்நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்த மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாஇ எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி வரை விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு 32 சாட்சிகளுக்கும் அழைப்பாணை அனுப்புமாறு மற்றுமோர் உத்தரவையும் நீதிமன்ற பதிவாளருக்கு மஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

Comments
Loading...