தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் எச்சங்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வரையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனித எச்சங்களின் மாதிரியை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் இடம் தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்படவிருந்தது. எனினும் மன்னார் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணைகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

 

Comments
Loading...