தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் பட்டினிப்போராட்டம்!

viber imageதமிழகம்,திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்கு பேர் தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டி காலவரையறையற்ற பட்டினிப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களில் அவுஸ்த்ரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும்,விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், ஜாமீனில் இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்த பின்னர் சிறை வாசலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் பல வருடங்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி அடைக்கப்படுகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் எட்டு வருடங்களாக கூட சில ஈழ அகதிகள்  அடைத்து வைக்கப்பட்டிருப்பதும்  இவர்களின் விடுதலைக்காக அவ்வப்போது சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தாலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்காதது மிகவும் வேதனையான விடையமாகும்.

viber image

2

3

4

Comments
Loading...