Designed by Iniyas LTD
திருப்பதி செல்ல ஆதார் அட்டை இனி அவசியம்!
அங்கப்பிரதட்சணம் செய்ய இனிமேல் ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் அங்கப்பிரதட்சணம் செய்து சாமியை வழிபட்டு செல்கிறார்கள்.
அப்போது அவர்கள் கருவறையை சுற்றி உருண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனிமேல் ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து கோவில் செய்தி தொடர்பு அதிகாரி கூறுகையில், ‘அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் இனிமேல் கட்டாயம் ஆதார் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறை இன்று (20-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. பக்தர்கள் மீண்டும் மீண்டும் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.