தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமலையில் இரு தமிழ் இளைஞர்கள் கைது!

திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இருந்து கிண்ணியா பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் சிற்பிகளை எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றில் சட்டவிரேதமான முறையில் சிற்பிகள் எடுத்துச் செல்வதாக புல்மோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகாசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுததுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
Loading...