Designed by Iniyas LTD
திருமலையில் உள்ள “கன்சைட்” நிலத்தடி சித்திரவதை முகாம் குற்றப்பிரதேசமாக நீதிமன்றினால் அறிவிப்பு!
திருகோணமலை ஸ்ரீலங்கா கடற்படை முகாமுக்குள் அமைந்துள்ள “கன்சைட்” எனப்படும் நிலத்தடி சித்திரவதைக் கூடமானது “குற்றப் பிரதேசமாக” கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன அவர்களால் நேற்று அறிவிக்கப்பட்டது.குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் காரணத்தால் அப் பகுதிக்குள் வெளியார் நுளைவதனூடாக சாட்சியங்கள் அழிவடையலாம் என சுட்டிக்காட்டிய நீதவான் காணாமல் போன 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் பெற்றோர் உறவினர்களை தேவை ஏற்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி மன்றின் அனுமதியோடு அவர்களை அங்கு அழைத்து செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பல வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கில் உடன் தலையீடு செய்யுமாறும் மன்றுக்கு உதவியாக சிரேஷ்ட அரச சட்டவாதி ஒருவரை வழக்கு விசாரணைகளின்போது மன்றில் ஆஜராகுமாறும் சட்டமா அதிபருக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக நேற்று இரண்டாவது முறையாகவும் நீதவான் அறிவித்தல் விடுத்தார்.
இரண்டாவது அறிவித்தலையும் சட்டமா அதிபர் கணக்கில் கொள்ளாது செயற்படின் தொலைபேசியூடாக நேரடியாக சட்டமா அதிபரை தொடர்புகொள்ள வேண்டி வரும் எனவும் நீதவான் லங்கா ஜயரத்ன எச்சரித்தார்.