Designed by Iniyas LTD
திருமலையில் நீரில் மூழ்கி மீனவர் பலி!
திருகோணமலை – அடம்பொட வெட்டைப் பகுதியிலுள்ள களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவு
இன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் அடம்பொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நல்லையா மகேஸ்வரன் (32 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீச்சு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த குறித்த நபர் நீரில் விழுந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. அவருக்கு வலிப்பு ஏற்பட்டதன் காரணத்தால் அவர் நீரில் விழுந்திருக்கலாம் என அவரது மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.